மறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா

Advertisement

மறக்க முடியா பயணம் - படகு வீடு

கேரளா ஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் ! சில பயணங்களில் சிலர் போட்டோ எடுப்பதற்கும், அதை செய்யாதே இதை செய்யாதே என்று ஹிட்லர் போல இருப்பதை பார்த்திருக்கிறேன், ஆனால் அப்படி செய்யும் பயணங்கள் மனதில் நிற்குமா என்பது சந்தேகம்தான் ! நாங்கள் நான்கு நண்பர்களும் இந்த பயணம் ஆரம்பிக்கும்போது குழந்தை போல குதூகலத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினோம்.... அதை சரியாக செய்தோம் என்றே நினைக்கறேன் ! கேரளாவில் இருக்கும் ஆலப்புழாவில் ஒரு நான்கு நாட்கள் குழந்தைகளாக சுற்றி திரியலாமே என்று யோசித்து எல்லோரும் கிளம்பினோம்..... அந்த பயணத்தில் படகு வீட்டில் பயணம் என்றவுடன் எல்லோருக்கும் சந்தோசம் ! சீசன் இல்லாதபோது இந்த படகு வீடுகள் சுமார் ஏழாயிரம் ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இந்த படகு வீடுகளில் பல வகைகள் இருக்கின்றன, அதற்க்கு ஏற்ப விலையும் !!

Advertisement
/body>