ஜப்பானில் பெய்து வரும் கனமழையால், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 122 பேர் பலியாகி உள்ளனர்.
ஜப்பானில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்கள் வெள்ளக்காடாக ஆனது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் அடித்து சென்றன. கனமழை எதிரொலியாக, சுமார் 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை இதுவரை 122 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காணாமல் போன பலரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.