ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி கிராம மக்கள் வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மூன்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

எங்கள் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்தது. தற்போது அந்த ஆலை மூடப்பட்டு உள்ளது. இதனால் எங்கள் கிராம மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறார்கள். எங்களது அடிப்படை வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வசதி இல்லாததால் உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதன் மூலம் எங்களது உணவு தேவையும், அடிப்படை தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு, நாங்களும், எங்களை சுற்றியுள்ள குடும்பங்களும் பயன்பெற முடியும். எங்கள் கிராமத்தின் நிலையை கருத்தில் கொண்டு எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி, படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, கல்வி உதவித்தொகை என கடந்த 22 ஆண்டுகளாக செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

நாங்கள் ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 22 ஆண்டுகளாக டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறோம். இந்த ஆலை மூலமாக எங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் நிலையில், பல்வேறு அன்னிய சக்திகளின் தூண்டுதலின் காரணமாக போராட்டம் நடைபெற்று வன்முறையாக மாறியது. இதையடுத்து ஆலை மூடப்பட்டது. தூத்துக்குடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயங்கி வருகின்றன. அவை அனைத்தும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தாமிரதாது, ராக்பாஸ்பேட், நிலக்கரி, தாதுமணல் ஆகியவற்றை கையாள பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த ஆலையை சார்ந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல பிரச்சினைகளில் இருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறோம். பல ஆண்டுகளாக இந்த ஆலையில் வேலை செய்த நாங்கள் நல்ல உடல்தகுதியுடன் தான் உள்ளோம்.

ஆனால் வதந்திகளால் மக்கள் உணர்வு தூண்டப்பட்டு பலரின் வேலை பறிபோகும் அளவிற்கு போராட்டம் நடந்தது. ஸ்டெர்லைட் ஆலை சுகாதாரக்கேடு விளைவிக்கும் செயலை செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அன்னிய சக்திகள் எங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்டது. எங்கள் வாழ்வாதாரம் மீண்டும் மலர ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!