டிரம்ப் நம்பர் 1 - மோடி நம்பர் 3... உலக கணக்கெடுப்பு முடிவு

ஊடகங்களில் அரசியல் தலைவர்களின் நிலை

Jul 12, 2018, 09:15 AM IST

உலக அளவில் சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் எந்த இடத்தை பெற்றுள்ளனர் என்று 'டிவிப்ளோமஸி' என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Trump and modi

பர்ஸன் கோன் மற்றும் வோல்ஃபே என்ற தகவல் தொடர்பு நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி, டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலிடத்திலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்றாம் இடத்திலும் இருப்பது தெரிய வந்துள்ளது.

டிரம்ப்பை டுவிட்டரில் 5 கோடியே 20 லட்சம் (52 மில்லியன்) பேர் பின்தொடர்கின்றனராம். அவரை விட 45 லட்சம் குறைந்த எண்ணிக்கையில் போப் பிரான்சிஸ் இரண்டாமிடத்தில் இருக்கிறார். டிரம்ப்பை விட 1 கோடி எண்ணிக்கை குறைவாகப் பெற்று நரேந்திர மோடி மூன்றாமிடத்தை வகிக்கிறார்.

அதேவேளையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் 43 லட்சத்து 20 ஆயிரம் (43.2 மில்லியன்) பேரால் விரும்பப்படும் மோடி முதலிடத்தை பெற்றுள்ளார். அவரை விட 23 லட்சத்து 50 ஆயிரம் குறைவான எண்ணிக்கையில் டொனால்டு டிரம்ப் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

187 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் 951 டுவிட்டர் கணக்குகள் இதில் கணக்கெடுக்கப்பட்டன. 372 தனி நபர் கணக்குகளும் 579 அலுவலக, நிறுவன கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டன.

ரீடுவிட் கணக்கில் சௌதி அரேபிய மன்னர் சல்மான் முதலிடம் பெற்றுள்ளார். அவரது டுவிட்கள் 1,54,294 முறை ரீடுவிட் செய்யப்பட்டுள்ளன.

You'r reading டிரம்ப் நம்பர் 1 - மோடி நம்பர் 3... உலக கணக்கெடுப்பு முடிவு Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை