இனி சிறைக்குள்ளே விசாரணை- நவாஸ் ஷெரிஃப் வழக்கில் புது முடிவு

Jul 14, 2018, 20:16 PM IST

நவாஸ் ஷெரிஃப் மீதான வழக்கை இனிமேல் அவர் இருக்கும் அடியாலா சிறைச்சாலையிலேயே விசாரிக்கலாம் என பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமர் பதவி வகித்தவர் நவாஸ் ஷெரிஃப். இவர் பதவிக்காலம் முடிந்த பின்னர் இவர் மீது பனாமா பேப்பர்ஸ் ஊழல் தொடர்ந்து பல ஊழல் வழக்குகள் பதியப்பட்டன. மேலும், அளவுக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கிலும் நவாஸ் ஷெரிஃப், அவரது மகன்கள், மகள் ஆகியோர் மீது பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளில் பல முறை ஆஜராகமல் கைது வாரண்ட் வரை பெற்றுள்ளார் நவாஸ். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வந்த நவாஸ் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் பாகிஸ்தானின் அடியாலா சிறைச்சாலையில் கைது ஆகி இருக்கும் நவாஸ், இனி சிறைச்சாலையிலேயே விசாரிக்கப்படுவார். இனி ஊழல் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகமல் சிறைச்சாலையிலேயே வழக்கு நடக்கும் என பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

You'r reading இனி சிறைக்குள்ளே விசாரணை- நவாஸ் ஷெரிஃப் வழக்கில் புது முடிவு Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை