மருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீட்டைக் குறைக்க வேண்டும்!

Jul 14, 2018, 19:26 PM IST

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வில் 69 சதவிகித இட ஒதுக்கீடு பின்பற்றுவதற்கு எதிராக 'ஒசி' பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக குறைக்கவேண்டும் என இடஒதுக்கீடு இல்லாத (ஓசி) பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் முத்துராமகிருஷ்ணன், சத்தியநாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு முறையை பின்பற்றுவதால் மருத்துவ படிப்பில் சேர தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றும் அம்மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவால் கலந்தாய்வு மூலம் சேர்ந்த தனக்கு பாதிப்பு வரக்கூடாது என்று மாணவர் சத்திய நாராயணன் மனு அளித்துள்ளார்.

You'r reading மருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீட்டைக் குறைக்க வேண்டும்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை