இடியட் என்று தேடினால் ட்ரம்பின் முகத்தை காட்டும் கூகுள் !

Jul 21, 2018, 08:58 AM IST

கூகுளில், ஆங்கிலத்தில் இடியட் என்று தேடினால் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் படம் வருகிறது. இதனால், புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.

உலகளவில் பிரபல தேடுதளமாக இருந்து வருகிறது கூகுள். கூகுளில் நாம் தேடும் கேள்விகளுக்கு நம்பகத்தன்மையான பதில் கிடைக்கும். அந்த வகையில், கூகுள் தேடுதலில் இடியட் என்று டைப் செய்து தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் காண்பிக்கிறது. இதனால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, ரெட்டிட் என்ற இணையதளத்திலும் முட்டாள் என்ற வார்த்தையை அமெரிக்க அதிப் ட்ரம்பின் படத்துடன் இணைக்கும் பணியை ஒரு குழு இணைந்து செயல்பட்டது. அந்த வகையில், அமெரிக்க அதிபரின் முரண்பாடான செயல்கள் காரணமாக கடுப்பில் சிலர் கூகுளில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.


Leave a reply