கிரிமினல் வழக்கால் அதிபர் புதின் சுயேட்சையாக போட்டி!

ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

by Lenin, Dec 18, 2017, 12:07 PM IST

ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

Vladimir Putin

ரஷ்யாவின் ஜனாதிபதியாக, கடந்த 2012ஆம் ஆண்டு பதவியேற்றார் விளாடிமிர் புதின். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவுற உள்ளது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான விவாதம் ரஷ்ய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன் முடிவில், 2018ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதியன்று ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடத்த முடிவாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான தேதியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை, (டிசம்பர் 15) அன்று சபாநாயகர் வெளியிட்டார். இந்தத் தேர்தலில் மீண்டும் களமிறங்கப் போகிறார் விளாடிமிர் புதின்.

கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து ரஷ்யாவின் ஜனாதிபதியாகச் செயல்பட்டு வருகிறார் புதின். இந்தத் தேர்தலையும் கணக்கில்கொண்டால், அவர் நான்காவது முறையாக தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். ஆனால், இந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

இது குறித்து கூறியுள்ள விளாடிமிர் புதின், “பல்வேறு கிரிமினல் வழக்குகளில் சிக்கியிருப்பதால் எதிர்க்கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது. எனக்கு எதிராகக் கடுமையான போட்டி நிலவும் என்றாலும், சுயேச்சையாகப் போட்டியிடுவதால் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளின் ஆதரவு கிடைக்கும். அதனால், நிச்சயம் வெற்றி பெறுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading கிரிமினல் வழக்கால் அதிபர் புதின் சுயேட்சையாக போட்டி! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை