ஜக்கி வாசுதேவ் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும் - தண்ணீர் மனிதர் அதிரடி

பழங்குடி பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்தம்மாள் தொடர்ந்துள்ள வழக்கு ஜெயித்து விட்டால் ஐந்தாவது சாமியாராக ஜக்கி வாசுதேவ் சிறையில் இருப்பார் என தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தெரிவித்தார்.

by Lenin, Dec 18, 2017, 11:36 AM IST

பழங்குடி பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்தம்மாள் தொடர்ந்துள்ள வழக்கு ஜெயித்து விட்டால் ஐந்தாவது சாமியாராக ஜக்கி வாசுதேவ் சிறையில் இருப்பார் என ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் தெரிவித்தார்.

Jaggi Vasudev

“இந்தியாவின் தண்ணீர் மனிதர்” என்று புகழ்பெற்ற ராஜேந்தர சிங் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஞாயிறன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ஒரு அரசாங்கம் ஆற்றையும், நீர் நிலைகளையும் மாசுபடுத்தும் போதும், அதைக் கெடுக்கும் போதும் அதைத் தடுப்பதுதான் சாமியாரின் வேலை என்று மட்டுமே ஜக்கி வாசுதேவினை சந்தித்த போது நான்தெரிவித்தேன்.

இதுவரை நாடு முழுவதும் 9 ஆறுகளை நான் மீட்டெடுத்து இருக்கின்றேன். ஆனால் இதுவரை ‘மிஸ்டு கால்’ மூலம் நதிகளை மீட்டு எடுப்பது குறித்து எனக்கு எதுவும் தெரிய வில்லை. அது எப்படி சாத்தியம் என்பதும் தெரியவில்லை. இதுபோன்ற சாமியார்களுடன் அரசியல்வாதிகளும் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள மனித உறவுகளைச் சிதைக்கின்றனர்.

நதிகளை மீட்கும் ஜக்கியின் திட்டம் மக்களிடம் இருந்து நிலத்தை பறிப்பதற்கான திட்டம். இத்திட்டத்தைக் காட்டி பல மாநிலங்களில் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இது தவறான நடவடிக்கை. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ராம் ரஹீம்பாபா, ஆசாரம் பாபா உள்ளிட்ட 4 பிரபல சாமியார்கள் சிறைக்குப் போயிருக்கின்றனர்.

பழங்குடி பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்தம்மாள் தொடர்ந்துள்ள வழக்கு ஜெயித்து விட்டால் ஐந்தாவது சாமியாராக ஜக்கி வாசுதேவ் சிறையில் இருப்பார். இவரை அம்பலப்படுத்தாவிட்டால் ஆறுகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு ஏற்படும். ஜக்கி வாசுதேவ்வின் மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்த உள்ளேன். இதன் ஒருபகுதியாக வரும் 19 ஆம் தேதி கோவையில் ‘தர்மம் காப்போம்’ என்ற பெயரில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

You'r reading ஜக்கி வாசுதேவ் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும் - தண்ணீர் மனிதர் அதிரடி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை