ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சரணடைந்தனர்

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கும், தலிபான் தீவிரவதிகளுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப்போரை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அங்கு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.

Terrorists surrendered

இந்நிலையில், அவர்களுக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல்கள் நீடித்து வருகின்றது. ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியல் உள்ள ஜோஸ்ஜான் மாகாணத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

இதற்கிடையில், அங்கு 150-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது குறித்து வடக்குப் பகுதி ராணுவ தளபதி முகமது ஹனிப் ரெஸாயீ கூறுகையில், “கடந்த காலத்திலும் இப்படி ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண் அடைந்தனர். ஆனால் தற்போது அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரும், துணைத்தலைவரும் 150-க்கும் மேற்பட்டோருடன் சரண் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.