தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் எபோலா வைரஸ்: 33 பேர் பலி

Aug 5, 2018, 12:51 PM IST

தென் ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் மீண்டும் எபோலா நோயின் தாக்கத்தினால் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தென் ஆப்பரிக்கா நாடுகளில் எபோலா நோய் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட எபோலா நோய் பரவி பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் மீண்டும் தாக்கி உள்ளது. காங்கோ நாட்டின் வடக்கு பகுதிகிளல் 22 பேர் எபோலா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிழக்கு காங்கோவில் எபோலா நோய் பாதிப்பு காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 879 பேருக்கு எபோலா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. எபோலா வைரஸ் தடுக்க சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எபோலா கிருமி ஒரு விலங்கின் ரத்தம் அல்லது உடல் திரவங்களால் பரப்படுகிறது என்றும் பழம் தின்னும் வெளவால்கள் மூலம் கிருமி பரவுவதாகவும் கூறப்படுகிறது.

You'r reading தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் எபோலா வைரஸ்: 33 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை