இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும், சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்தோனேசியாவில் உள்ள பாலி மற்றும் லாம்போக் தீவுகளின் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதி மக்களுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.
பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்களும் உடைந்து சாய்ந்தன. மேலும், கடலுக்கு அடியில் 15 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர், இந்த அறிவிப்பை திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில், இந்த பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 82 பேர் பலியானதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.