அமெரிக்கா செல்ல இருக்கும் இந்திய வயாக்ராக்கள்

அமெரிக்கா செல்ல இருக்கும் இந்திய வயாக்ராக்கள்

Aug 9, 2018, 08:39 AM IST

ஆண்களின் விறைப்புத்தன்மை குறைபாட்டை சரி செய்ய உதவும் வயாக்ரா மாத்திரையை ஃபைசர் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

tablets

இந்நிறுவனத்தின் அமெரிக்க காப்புரிமை 2020ம் ஆண்டில் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் இம்மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி பெற்றுள்ளன.

ஸொடனஃபில் சிட்ரேட் மருந்தினை கொண்ட என்ற மாத்திரைகளை உற்பத்தி செய்வதற்கு 15 நிறுவனங்களுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அனுமதி அளித்துள்ளது.

வயாக்ராவை தயாரிக்கும் ஃபைசர் நிறுவனத்தின் காப்புரிமை முடிவடைவது, ஏனைய நிறுவனங்களுக்கு அமெரிக்க சந்தைக்குள் நுழைய மகத்தான வாய்ப்பை வழங்கியுள்ளது.

அனுமதி பெற்றுள்ள 15 நிறுவனங்களுள், ரூபிகான் ரிசர்ச், ஹெட்டரோ டிரக்ஸ், மாக்லியாட்ஸ் பார்மா, டாக்டர் ரெட்டிஸ், அரபிந்தோ பார்மா, டாரண்ட் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் அஜந்தா பார்மா ஆகிய 7 நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்தவை ஆகும்.

1990ம் ஆண்டுகளில் ஃபைசர் மருந்து நிறுவனம், மார்பில் ஏற்படும் நோய் தொற்றினை குணமாக்குவதற்கு ஸொடனஃபில் என்ற மருந்தை ஆய்வு செய்து கொண்டிருந்தது.

நோய் தொற்றின் காரணமாக வரக்கூடிய நெஞ்சுவலியை குணமாக்குவதில் அந்த மருந்து எதிர்பார்த்த பலனை தரவில்லை. மாறாக, சோதனையடிப்படையில் அந்த மருந்தை எடுத்துக்கொண்ட ஆண்களுக்கு வேறொரு பக்கவிளைவு ஏற்பட்டது.

இம்மருந்தை உட்கொண்ட ஆண்கள் பலருக்கு விறைப்பு அதிகமாகி, தாம்பத்ய உறவு மேம்பட்டது. இப்படி எதிர்பாராத விதமாகவே வயாக்ரா கண்டுபிடிக்கப்பட்டது.

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட வயாக்ரா, உலகமெங்கும் பிரபலமான மருந்தாக உள்ளது. அமெரிக்காவில் இதன் விலை 65 டாலர். அதாவது 4,400 ரூபாய்க்கும் அதிகமாகும். ஃபைசர் நிறுவனமே, 2017ம் ஆண்டில் ஜெனரிக் முறையில் இம்மருந்தை தயாரித்து பாதி விலையில் அறிமுகம் செய்தது.

இந்திய நிறுவனங்கள், இந்தியாவில் 32 ரூபாய்க்கு வயாக்ரா போன்ற மருந்தை விற்பனை செய்து வருகின்றன. அதே விலையில் அமெரிக்க சந்தையில் மருந்தை இறக்குவது, அதிரடியாக இருக்கப்போகிறது.

You'r reading அமெரிக்கா செல்ல இருக்கும் இந்திய வயாக்ராக்கள் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை