அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடா மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் ஜாக்சன்வில் நகர் விடியோ கேம் மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மதுபான விடுதிகள் அதிகம் உள்ள இந்த நகரில் வார விடுமுறை தினங்களில் கேளிக்கை நிகழ்சிகள் அதிக அளவில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, அந்நகரின் லேண்டிங் எனும் வணிக வளாகத்தில் விடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த கேம் விளையாட்டில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், அங்கு திரண்டிருந்தவர்கள் மீது, திடீரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார் இதில் 2 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
‘கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர், தோல்வியடைந்ததால் அந்த விரக்தியில் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்’ சொல்லப்படுகின்றது. காயம் அடைந்தவர்கள் அனைவரது நிலமையும் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எப்து குறிப்பிடத்தக்கது.