வெளிநாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு ரூ.12 லட்சம் மதிப்பு பரிசு பொருட்கள்

Aug 27, 2018, 09:46 AM IST

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் மட்டும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் கிடைத்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு, இந்த நான்கு ஆண்டுகளில் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, அந்தந்த நாடுகள் சார்பில் பிரதமர் மோடிக்கு பரிசுகள் வழங்கப்பட்டுன்ன. அந்த மொத்த பரிசு பொருட்களின் மதிப்பு ரூ.12 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள மோன்ட்பிளாங்க கைக்கடிகாரம், ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி தகடு, ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள மோன்ட்பிளாங்க் பேனா செட், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மசூதி மாதிரி வடிவம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வாள் ஆகியவை பரிசாக கிடைத்துள்ளது.

இதைதவிர, கடவுள் சிலைகள், ஓவியங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள், புல்லட் ரயில் மாதிரி, படிக மற்றும் வெள்ளி கிண்ணம், பசுபதிநாத் மற்றும் முக்திநாத் கோவில்களின் மாதிரி, கால்வைகள், கம்பளம், பவுண்டன் பேனா உள்ளிட்டவையும் பரிசாக கிடைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது கிடைக்கும் பரிசு பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் அது மத்திய வெளியுறவு அமைச்சக கருவூலத்தில் சேர்க் வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி, ரூ.12.57 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை பிரதமர் மோடி கருவூலத்தில் சேர்த்து விட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading வெளிநாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு ரூ.12 லட்சம் மதிப்பு பரிசு பொருட்கள் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை