பிரேசிலில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான அரிய வகை பொருட்கள் நாசமாகி இருக்கும் என்று கூறப்படுகிறது.
பிரேசியின் ரியோ டி ஜெரிரோ நகரில் பழமைவாய்ந்த தேசிய அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில், டைனோசர் எலும்பு கூடுகள், 12 ஆயிரம் பழமையான லூசிய என்ற பெண்ணின் எலும்பு கூடு போன்ற அரிய வகை பழமைவாய்ந்த நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பூட்டியிருந்த இந்த அருங்காட்சியகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டிருப்பதை அறிந்து நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்குள் தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.
வரலாற்றுச் சின்னங்கள் அழிந்துவிட்டதாக கூறி ஆத்திரமடைந்த பொது மக்கள் அங்கு திரண்டதை அடுத்து, கண்ணபர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.
இதற்கிடையே, தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.