பாஜகவுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. #Sophia
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண், பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்டார்.
இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சோபியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஜாமின் கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் சோபியா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை குற்றவியல் நீதிபதி தமிழ்ச்செல்வி இன்று விசாரித்தார்.
பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தங்களது மகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறும் சோபியாவின் பெற்றோரை நீதிபதி கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோபியா, சிகிச்சை முடிந்தவுடன் வீடு திரும்பினார்.