அமெரிக்காவை மிரட்டும் அதி சக்தி வாய்ந்த புயல்...

Sep 14, 2018, 06:49 AM IST

அமெரிக்காவை அதி பயங்கரமான புயல் தாக்க உள்ளதால், கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் வசிக்கும் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில், அமெரிக்காவின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் அடிக்கடி புயல் தாக்குவது வழக்கம். இப்போது அதே போல் ஒரு புயல், அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை தாக்க உள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகிய புயல், அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் புயல் அமெரிக்காவை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதி சக்தி வாய்ந்த அந்த புயலுக்கு புளோரன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மணிக்கு 215 கிலோமீட்டருக்கு புயல் காற்று வீசும் என்றும், கடல் அலைகள் 12 அடி உயரத்துக்கு மேலாக எழும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு கரோலினா, வெர்ஜினியா ஆகிய மாநிலங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தேவைப்படுபவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

You'r reading அமெரிக்காவை மிரட்டும் அதி சக்தி வாய்ந்த புயல்... Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை