எச்4 EAD விசாவிற்கு அனுமதி வழங்குவதற்கான முடிவை, இந்திய-அமெரிக்கர்கள் பலர் எதிர்பார்க்கின்றனர். இது அடுத்த மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்ன்று டிரம்ப் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்த தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பில் ஒப்புதலுக்காக தொண்ணூறுகளில் மூன்று சதவிகிதம் வழங்கப்பட்டன, மேலும் சீனாவில் பிறந்த தனிநபர்களுக்கு ஐந்து சதவிகிதம் வழங்கப்பட்டன. மீதமுள்ள 2 சதவீதம் பேர் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்த காலத்தில் 2015-ம் ஆண்டு எச்1பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும் எச்4 EAD விசா அளித்து, வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார். இதன் காரணமாக எச்1பி விசாவில் அமெரிக்காவில் வேலை பார்க்கிற ஆண்களின் மனைவிமாருக்கும், பெண்களின் கணவர்களுக்கும் அங்கேயே வேலை பார்க்கும் வாய்ப்பு (ஒர்க் பெர்மிட்) கிடைத்தது. இது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிற தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வரமாக அமைந்தது.
ஆனால் தற்போதைய டிரம்ப் நிர்வாகம், “அமெரிக்க பொருட்களையே வாங்குங்கள் அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்துங்கள்” என்ற கொள்கையை அறிவித்து தீவிரமாக பின்பற்றி வருகிறது. இந்த நிலையில், ஒபாமா காலத்தில் எச்1 பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு வழங்கி வந்த ஒர்க் பெர்மிட் முறையை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனை இந்தியர்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டினர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சேவ் ஜாப்ஸ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில், ஒபாமா அரசின் இந்தக் கொள்கையால் அமெரிக்க தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 28, மே 22 மற்றும் ஆகஸ்டு 20-ந்தேதிகளில் விசாரணை நடைபெற்றது. 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கு, இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உள்நாட்டு பாதுகாப்புத் துறை ஆஜராகி விளக்கம் அளித்தது.
அதாவது, ஹெச்-4 EAD விசா மூலம் வழங்கப்பட்ட பணி அனுமதி இன்னும் 3 மாதத்தில் ரத்து செய்யப்படும். இதுதொடர்பான புதிய சட்டம் 3 மாதத்திற்குள் இயற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் டிரம்ப் அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஹெச்-4 EAD விசாவை ரத்து செய்ய நீதிமன்றம் விரும்பினால், அரசு அதை நிறைவேற்ற தயாராக இருப்பதாக கூறியது. இதன் காரணமாக அமெரிக்காவில் ஹெச்-4 EADவிசா மூலம் பணிபுரிந்து வருவோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் 25, 2017 வரை, H4 EAD விசா வைத்திருப்பவர்களுக்கு 1,26,853 விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளது. ஆட்சி அமல்படுத்தப்பட்ட மே, 2015 முதல் 90,946 புதிய அனுமதி, 35,219 புதுப்பித்தல், 688 இழப்பு அட்டைகளை உள்ளடக்கியது. இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அங்கு அனேக இந்தியர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் உள்ளது.