மேலை நாட்டு பழக்கவழக்கமான ஒரு பாலின திருமணத்தை மலேசியா அங்கீகரிக்காது என்று மலேசிய பிரதமர் டாக்டர் மஹாதிர் முகமது தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான செயல்பாட்டுக்காக பிரத்யேகமாக கூடிய அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய பிரதமர், "மலேசிய மனித உரிமை ஆணையம் செய்த பரிந்துரைகளை அரசு மதிக்கிறது. மனித உரிமை என்று கூறப்படும் சில கருத்துகள் மேலை நாடுகளே மட்டும் உரித்தானவை. நமது விழுமியங்களும் மேற்கத்திய விழுமியங்களும் வெவ்வேறானவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பெண்ணுடன் பெண், ஆணுடன் ஆண், இருபாலினத்தவரோடும் உறவு மற்றும் மூன்றாம் பாலின உறவு (LGBT), ஒரு பாலினத்தவர் திருமணம் இவையெல்லாம் அவற்றுள் அடங்கும்" என்று கூறிய அவர், "சொந்த அல்லது தத்து எடுத்த பிள்ளைகளை கொண்ட தம்பதியரே குடும்பமாவர். இரு ஆண்கள் அல்லது இரு பெண்கள் சேர்ந்திருப்பதை குடும்பம் என்று கருத முடியாது," என்றும் தெரிவித்துள்ளார்.