அணு ஆயுத தளத்தை நிரந்தமாக மூட ஒப்பந்தம்!

Sep 22, 2018, 21:52 PM IST

வட கொரியாவின் பியாங்யாங் என்ற பகுதியில் வட மற்றும் தென் கொரியா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வட கொரியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங் சூக்குடன் நேற்று பியாங்யாங் பகுதிக்கு சென்றார்.

அவர்களை வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன், மனைவி ரி சோல் ஜூ மற்றும் உயர் அதிகாரிகளுடன் வந்து வரவேற்றார். ஏற்கனவே 2 முறை வட கொரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ள நிலையில், 3வது முறையாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, அணு ஆயுத நடவடிக்கைகள் மற்றும் கொரிய தீபகற்க நடவடிக்கைகள், ஏவுகணை, ரயில் மற்றும் சாலை வழித்தடங்கள் குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading அணு ஆயுத தளத்தை நிரந்தமாக மூட ஒப்பந்தம்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை