இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
வடக்கு இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் கடந்த 28-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோளில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது.
நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுலவேசி தீவு பகுதியை சுனாமி தாக்கியது. இந்த சுனாமி தாக்குதலில் 10 அடி உயரத்திற்கு எழுந்த ஆழிப்பேரலைகள் கடலோர பகுதிகளை வாரி சுருட்டியது. குடியிருப்புகள், மருத்துவமனை என ஒன்றுவிடாமல் அனைத்தும் கட்டிடங்களும் தரைமட்டமானது. இதுகுறித்து தெரிவித்த இந்தோனேசியா தேசிய பேரிடர் மீட்பு படை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.