உலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கியதை அடுத்து, தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியது.
உலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கியது. இதனால், யூ டியூப் இணையதள சேவையை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செயல்படும் யூ டியூப் இணையதளம் சேவை உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் வீடியோ பதிவுகளை பகிர உதவுகிறது.
யூ டியூப் சேனல்கள் மூலம் பலர் சம்பாதித்தும் வருகின்றனர். கடந்த 2005ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட யூ டியூப் இணையதளத்தை 2006ம் ஆண்டு கூகுள் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை முதல் உலகளவில் யூ டியூப் இணைய தளம் சர்வர் கோளாறு காரணமாக முடங்கியது. இதையடுத்து, பழுதை சரி செய்யும் பணியில் உயர்நுட்ப வல்லுனர் குழு ஈடுபட்டதை அடுத்து, தற்போது யூ டியூப் இணைய தளம் சேவை செயல்படத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, யூ டியூப் சேவை முடங்கியது குறித்து அந்நிறுவனம் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது.
அதில், யூ டியூப் சேவை செயல்படவில்லை என்று நீங்கள் அளித்த புகார் சரி செய்யப்பட்டது. யூ டியூப் டிவி, யூ டியூப் மியூசிக் ஆகியவற்றை பயன்படுத்துவதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகின்றன. கோளாறு சரிசெய்த பிறகு தகவல் தெரிவிக்கப்படும். இடையூறுக்கு மன்னிக்கவும் என பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், யூ டியூப் இணையதள சேவை செயல்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.