மோடி பரிசளித்த ஜாக்கெட் அணிந்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அணியும் கோட் இந்தியளவில் மட்டுமல்லாமல் உலகளவில் பிரபலமாகி வருகிறது. இந்த கோட்டுக்கு மோடி ஜாக்கெட் என்றே பெயர் வந்துவிட்டது. அந்த அளவிற்கு பிரபலமான ஜாக்கெட்டை தென்கொரிய அதிபரின் விருப்பத்தை அறிந்து அவருக்கு மோடி பரிசாக அளித்தார்.
கடந்த ஜூலை மாதம் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், இந்தியாவிற்கு வந்தபோது பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, அவரது ஜாக்கெட் கம்பீர தோற்றத்தை அளிப்பதாக மூன் ஜே இன் புழந்துரைத்தார்.
இதையடுத்து, பிரதமர் மோடி 4 ஜாக்கெட்டுகளை தென்கொரிய அதிபருக்கு தனது பரிசாக அனுப்பி வைத்தார். அந்த ஜாக்கெட்டை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை மூன் ஜே இன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
4 ஜாக்கெட்டுகள் அணிந்து எடுத்த புகைப்படத்துடன், ஜாக்கெட் தனக்கு கச்சிதமாக பொருந்துவதாகவும், மோடிக்கு நன்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.