விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி... குட்டிக் கரடியின் கலக்கல் வீடியோ!

Baby bear shows the world why you should Never Give Up!

by Kani Selvan, Nov 8, 2018, 16:38 PM IST

முடியுமா? முடியாதா? போன்ற கேள்விகளை புறந்தள்ளி முயற்சியை மூலதனமாக்கி வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தளராமல் பயணிப்பதே தன்நம்பிக்கையின் அடையாளம்.

இன்று பலரும் ஒரு முறை முயற்சி செய்த பின் இது நமக்கு ஒத்து வராது போல என்று ஒதுங்குபவர்களே அதிகம். பல வெற்றியாளர்களின் அரிச்சுவடியை அலசி ஆராய்ந்தால் அங்கு நமக்கு காண்பது முயற்சியும், அதற்கான சரியான பயிற்சியின் தடங்கள் என்றால் மிகையாகாது.

இன்று ஒரு சில சாதரண விஷயங்களுக்காக மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை மனமுடைந்து போவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. வெற்றி என்பது பிரச்னைகளை கண்டு ஒதுங்குவதலோ, பின்வாங்குவதலோ சாத்தியப்பட்டுவிடாது.

கடுமையான உழைப்பின் மூலமே சாத்தியப்படுத்த முடியும். சாதித்தவர்கள் வரலாற்றுப்பக்கங்களும் இதையேதான் உணர்த்தும்.

பேச்சு வழக்கில் வேண்டுமென்றால் சாத்தியப்படும் உண்மையில் இது எப்படி சாத்தியமாகும்  என்று கேள்வி எழுப்புவரா நீங்கள்? உங்களுக்கான வீடியோதான் இ்து.

இதற்கான பதிலை இந்த குட்டி கரடி சொல்லும். தன் தாயுடன் பயணம் செய்யும் குட்டி கரடி தாய் கரடி ஏறிய பனி நிறைந்த பாறையில் எவ்வாறு ஏறுகிறது என்பதுதான் இந்த வீடியோ.

பனிப்பாறையில் ஏறும் தாய்கரடி ஒரு சில சறுக்கல்களில் மேற்புறத்தை அடைந்துவிடுகிறது. ஆனால் குட்டிக்கரடி ஒன்றுக்கு மேற்பட்ட முறை முயற்சி செய்தும் தோல்வியை மட்டுமே சந்திக்கிறது.

ஒரு கட்டத்தில் தாயை நெருங்கும் சமயம் தான் தொடங்கிய இடத்தையும் தாண்டி கீழ் நோக்கி சறுக்கி செல்ல நேரிடுகிறது. சிறிதும் தாமதிக்காத அந்த குட்டிக் கரடி 'போங்க தம்பி நாங்க ஏறாத மலையே இல்லை' என்பது போல் தான் நின்ற இடத்தில் இருந்து மீண்டும் சரசரவென மேல் ஏறி தன்தாயுடன் பயணத்தை மேற்கொள்கிறது.

நினைத்ததை சாதித்த அந்த குட்டி கரடியின் சாகசம் பலரையும் புருவத்தை விரிய வைக்கும் வகையில் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை தற்போது நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருவதோடு, இதை படம் பிடித்தவரையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஊருக்குள் வந்த பத்து அடி நீள மலைப்பாம்பு!

You'r reading விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி... குட்டிக் கரடியின் கலக்கல் வீடியோ! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை