இலங்கையின் பிரதமராக இருந்தவர் ரனில் விக்ரமசிங்கே. அவர் அக்டோபர் மாதம் 26 ந் தேதி பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரை அப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இலங்கை உச்சநீதி மன்றம் தடை விதித்து மேலும் ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தடை உத்தரவு, மைத்ரிபால சிறிசேனாவுக்கு பெரும் பின்னடைவாக விளங்கும் என அனைவரும் எதிர்பார்கின்றனர்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, கடந்தமாதம் 26 ஆம் தேதி ரனில் விக்ரமசிங்கை பதவி நீக்கம் செய்து, மகிந்த ராஜ பக்சேவை நாட்டின் புதிய பிரதமராக நியமித்தார்.
இதனால் அந்நாட்டு அரசியலில் பெரும் குழப்பம் நிலவியது. அக்குழப்பத்தை தீர்க்க இலங்கை அரசு வரும் 14 ந் தேதி நாடாளுமன்றத்தை கூட்டி அக்குழப்பத்திற்கான தீர்வை அறிய அனைவரையும் அழைத்தனர். மேலும் தனது பெரும்பான்மையை நிருபிக்க மைத்ரிபால சிறிசேன அரசுக்கு கட்டாயம் ஏற்பட்டது. அதனால் மைத்ரிபால சிறிசேனா இலங்கை நாடாளுமன்றத்தையும் கலைக்க நடவடிக்கை எடுத்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணம், ராஜபக்சேவால் தனது பெரும்பான்மை நிரூபிக்க முடியாததே என தகவல்கள் கசிந்து வருகின்றன.அதோடு அதிபர் சிறிசேனவால் கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததோடு, ஜனவரி 5 ஆம் தேதி நடக்க இருந்த பொது தேர்தலுக்கும் தடை விதித்துள்ளது. நாளை அறிவித்தப்படி நாடாளுமன்றம் கூட்டப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.