குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஸ்நாக்ஸ் உருளைக் கிழங்கு சிப்ஸ். கடைகளில் விற்கப்படும் சிப்ஸ் பாதுகாப்பானது என்று கூறிட முடியாது. எனவே வீட்டிலே ஆரோக்கியமான முறையில் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு - 1/2 கிலோ.
தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்.
எண்ணெய் - 150 கிராம்.
செய்முறை:
உருளைக்கிழங்கை முதலில் நன்றாக கழுவி எடுத்து அதனை சீவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் உப்பு மற்றும் மிளகாயைத் தூளை சேர்த்து கலக்கி வைக்கவும்.
அடுப்பினில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீவிய உருளைக் கிழங்கைப் போட்டு, பொரித்து எடுக்கவும்.
பொரித்த உருளைக் கிழங்கு சிப்ஸை பாத்திரத்தில் போட்டு அதன் மீது மிளகாய் மற்றும் உப்பு தூள் கலந்த கலவையை தூவி எல்லா சிப்ஸ்களிலும் படும்படி கலக்கி கொள்ளவும்.
சுவையான உருளைக் கிழங்கு சிப்ஸ் தயார்.
காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். ஒரு வாரம்வரை பயன்படுத்தலாம்.
குறிப்பு:
உருளைக் கிழங்கை சீவி துணியின் மேல் பரப்பிவிடவும். இதனால் ஈரம் உறிஞ்சப்பட்டு மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் கிடைக்கும்.
மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூள் பயன்படுத்தலாம்.