ஸோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ மொபைல் போன் நவம்பர் 22ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது என்று அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் மனு ஜெயின் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
ஸோமி நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள விளம்பர அறிமுக படத்தில் (teaser) அநேக காமிராக்கள் இணைந்திருப்பதுபோல் தெரிகிறது.
தொடுதிரை (ஸ்கிரீன்)
6.26 அங்குல தொடுதிரை 1080 X 2280 பிக்ஸலுடன் FHD தரம் கொண்டது.
காமிரா:
ரெட்மி நோட் 6 ப்ரோ மொபைல் போனில் முன்பக்கம் இரண்டு, பின்பக்கம் இரண்டு என மொத்தம் 4 காமிராக்கள் உள்ளன.
முன்பக்கம் 20 மெகா பிக்ஸல் தரம் மற்றும் போர்ட்ரய்ட் வசதியுடன் 2 மெகா பிக்ஸல் தரம் கொண்டது என்று இரண்டு காமிராக்கள் உண்டு.
பின்பக்கமுள்ள முதன்மை காமிரா 12 மெகா பிக்ஸல் தரம் கொண்டது. 1.4 மைக்ரான் வரைக்கும் எடுக்க போதுமானது. இரண்டாவது காமிரா போர்ட்ரய்ட் வசதி கொண்டது. இது 1.5 மெகா பிக்ஸல் தரம் கொண்டது.
மென்பொருளும் ப்ராசஸரும்:
இந்தியாவிற்கு வரவிருக்கும் ரெட்மி நோட் 6 ப்ரோ MIUI10 மென்பொருளுடன் Qualcomm Snapdragon 636 ப்ராசஸரில் இயங்கக்கூடியது.
சேமிப்பளவும் இயங்கும் வேகமும்:
சர்வதேச சந்தையில் 64ஜிபி சேமிப்பளவு மற்றும் 4ஜிபி RAM, 32 ஜிபி சேமிப்பளவு மற்றும் 3 ஜிபி RAM, 32 ஜிபி சேமிப்பளவு மற்றும் 4 ஜிபி RAM கொண்டதாக மூன்று வகையில் இந்த மொபைல் போன் கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில் இதில் இரண்டு வகைகள் மட்டுமே கிடைக்கக்கூடு என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பின்பக்கம் விரல்ரேகை பதிவினை அறியக்கூடிய சென்ஸார் கொண்டது.
உத்தேச விலை:
இதன் விலை 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.