ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவரான நார்வேயின் எரிக் சொல்ஹைம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டால் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான தூதராக இருந்தவர் எரிக் சொல்ஹைம். பின்னர் நார்வே அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இதைத் தொடர்ந்து ஐ.நா. சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவரானார். இது கென்யா தலைநகர் நைரோபியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
எரிக் சொல்ஹைம் தமது பயணங்களுக்காக ஐ.நா. விதிமுறைகளை மீறி பணம் செலவிட்டதாக தெரியவந்தது. மேலும் சுற்றுச் சூழல் விவகாரங்களில் அவர் கவனம் செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து எரிக் சொல்ஹைம் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐ.நா. சுற்றுச் சூழல் அமைப்புக்கு தற்காலிக தலைவராக ஜாய்ஸ் எம்ஸூயா பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.