நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு நல்லதே நடக்கும் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
லதா ரஜினிகாந்த் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி:
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும். ரஜினிகாந்த் ஆன்மீக பாதை, அரசியல் பாதை என்று என்ன முடிவு எடுத்தாலும் நான் உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருப்பேன்.
ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களின் கதை குறித்து மட்டும் அல்ல பொதுவாகவே எல்லா விஷயங்களிலும் நாங்கள் கலந்து ஆலோசிப்போம்.
திரை உலகில் ரஜினிகாந்துக்கு பொருத்தமான ஜோடி எனில் ஒருத்தர் என்று உண்மையாகவே சொல்லிவிட முடியாது. எல்லோரும் எனக்கு நண்பர்கள். எல்லோரும் எங்களுக்கு வேண்டியவர்கள். எல்லோரையும் நான் மதிக்கிறேன்.
இவ்வாறு லதா ரஜினிகாந்த் கூறினார்.