இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்ட்டில் நகரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1&0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் நகரில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் 3 பேட்ஸ்மேன்கள் நேற்று அரைசதம் அடித்தனர்.
விக்கெட்டுகளும் சீரான இடைவெளியில் இழந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்தது
இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர், 108.3 ஓவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலிய அணி.