Jun 6, 2020, 18:30 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட நேரம் 1995. அந்த நேரத்தில் முத்து படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். இப்படத்தில் ரஜினிக்கு முதலாளியாக சரத்பாபு நடித்தார். முன்னதாக இந்த வேடத்தில் நடிக்க ஜெயராம் தேர்வு செய்யப்பட்டார். Read More
Jun 6, 2020, 18:24 PM IST
நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் சமீபத்தில் தியேட்டர்காரர்களின் எதிர்ப்பையும் மீறி ஒடிடி தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தை வரும் 19ம் தேதி ரிலீஸ் செய்கிறது. Read More
Jun 6, 2020, 16:19 PM IST
தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை ஏஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இது துப்பாக்கி படத்தின் 2ம்பாகமாக இருக்குமென்று தகவல் வெளியானது. எஸ்.தமன் இசை அமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். அவருடன் மற்றொரு ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். Read More
Jun 6, 2020, 16:03 PM IST
நடிகர் ராஜ்குமார், ஜிதேந்திரா, ரேகா நடித்த கர்மயோகி மற்றும் ராஜ்திலக் படங்களைத் தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் அனில் சூரி (வயது 77)இவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு நேற்று மரணம் அடைந்தார். Read More
Jun 6, 2020, 15:59 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் மக்கள் திண்டாடி வருகின்றனர். மும்பையில் சிக்கிக்கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். இவர்களில் நூற்றுக்கணக்கானவர்களை மீட்டுத் தனி விமானத்திலும், பஸ்களிலும் சொந்த ஊருக்குக் கடந்த வாரங்களில் அனுப்பி வைத்தார் நடிகர் சோனு சூட். Read More
Jun 6, 2020, 14:45 PM IST
கொரோனா தொற்று காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெ.அன்பழகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்குக் கடந்த 4 நாட்கள் முன்பாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. Read More
Jun 6, 2020, 14:40 PM IST
சூரத் நகரில் ஜவுளி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விற்பனை மந்தமாக உள்ள நிலையில், தொழிலாளர் பற்றாக்குறையால் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சீன வைரஸ் நோயான கொரோனா, உலக நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் 2.36 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jun 6, 2020, 14:36 PM IST
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதித்தவர் எண்ணிக்கை 80,229 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலில் சீனாவை நெருங்கியிருக்கிறது இந்த மாநிலம். இந்தியாவில் இது வரை 2 லட்சத்து 36,657 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதில், ஒரு லட்சத்து 14,073 பேர் குணமடைந்துள்ளனர். 6642 பேர் பலியாகியுள்ளனர். Read More
Jun 6, 2020, 14:31 PM IST
கொரோனா வைரஸ் பரவாமல் சீனாவே கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், உலகத்திற்கு இந்த மோசமான பரிசை அந்த நாடு கொடுத்து விட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். Read More
Jun 6, 2020, 10:46 AM IST
இந்தியா, சீனா எல்லையில் போர் பதற்றத்தைக் குறைக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.உலகம் முழுவதும் கொரோனாவால் தவித்துக் கொண்டிருக்க, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. Read More