பாலிவுட் தயாரிப்பாளர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணம்.. ஜிதேந்திரா - ரேகாவை வைத்து படம் எடுத்தவர்..

by Chandru, Jun 6, 2020, 16:03 PM IST

நடிகர் ராஜ்குமார், ஜிதேந்திரா, ரேகா நடித்த கர்மயோகி மற்றும் ராஜ்திலக் படங்களைத் தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் அனில் சூரி (வயது 77)இவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு நேற்று மரணம் அடைந்தார்.

அனில் சூரிக்கு 2 தினத்துக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது, மறுநாள் மூச்சுத் திணறல் ஏற்பட்டது, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்து மருத்துவமனையில் சேர்க்க மறுத்து விட்டனர். முறைப்படியான சிகிச்சை அளிக்காததால் அவர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் அனில்சூரி உடல் வெர்சோவாவில் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் ஒரு சிலர் மட்டுமே கலந்துகொண்டனர்.


More Cinema News