Sep 7, 2019, 10:45 AM IST
இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்து மக்களுக்கு உரையாற்றி விட்டு பிரதமர் மோடி புறப்படும் போது, இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். பிரதமர் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். Read More
Sep 5, 2019, 10:56 AM IST
காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பொது மக்களும், பிரிவினைவாத இயக்கங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். அங்கு மீண்டும் வன்முறை ஏற்பட்டால், காஷ்மீருக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: Read More
Aug 22, 2019, 20:11 PM IST
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காங். தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர் துஷார் வெள்ளப்பள்ளி . இவர் செக் மோசடி தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சட்டத்துக்கு உட்பட்டு வேண்டிய உதவி செய்ய வேண்டுமென மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். Read More
Aug 20, 2019, 13:10 PM IST
ரூ.354 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் புரியை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர் Read More
Aug 17, 2019, 13:51 PM IST
பெஹ்லுகான் கொலை வழக்கின் தீர்ப்பை விமர்சித்ததாக பிரியங்கா காந்தி மீது ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Aug 13, 2019, 09:34 AM IST
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகிறார். இம்முறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாகிறார்.ராஜஸ்தானில் காலியாக உள்ள ஒரே ஒரு இடத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட, மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். Read More
Aug 8, 2019, 13:04 PM IST
பாகிஸ்தான் எல்லைக்குள் தைரியமாக பறந்து, அத்துமீறிய அந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மற்ற விமானப்படை விமானிகளுக்கு வாயு சேனா பதக்கமும் வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் இது பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிகிறது Read More
Aug 7, 2019, 08:59 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளின் தலைவர்களும் சுஷ்மாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். Read More
Aug 4, 2019, 12:44 PM IST
ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் இந்தியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியப் படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லைக்கோடு அருகே 2 நாட்களாக கிடக்கும் பாகிஸ்தான் வீரர்களின் சடலங்களை மீட்க முடியாமல் அந்நாட்டு படையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் சடலங்களை மீட்டுச் செல்ல இந்திய ராணுவம் பெருந்தன்மையாக அனுமதி வழங்கியுள்ளது. Read More
Aug 2, 2019, 13:31 PM IST
பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இந்தப் பிரச்னையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More