May 20, 2019, 11:49 AM IST
ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம்(பிஜேடி) கட்சியே வென்று 5வது முறையாக ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது Read More
May 20, 2019, 11:07 AM IST
தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு,க. கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன Read More
May 19, 2019, 21:25 PM IST
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு சாதகமாகவே வெளிவந்துள்ள நிலையில், இந்தக் கணிப்புகளை நம்ப வேண்டாம். முன்னரே இப்படி ஒரு கணிப்புகளை வெளியிடச் செய்து வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற திட்டமிட்டுள்ளது பாஜக என்று மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை செய்துள்ளார். Read More
May 19, 2019, 21:17 PM IST
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பலவற்றிலும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
May 19, 2019, 19:06 PM IST
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த அடுத்த நிமிடமே யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கப் போகிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. Read More
May 19, 2019, 11:59 AM IST
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி மீண்டும் ஆளும்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் 151 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு மே 18ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான லேபர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. Read More
May 18, 2019, 10:19 AM IST
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை முடிவடைகிறது. நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த நிமிடமே யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கப் போகிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் புள்ளி விபரங்களுடன் தயாராக காத்துக் கிடக்கின்றன. Read More
Apr 18, 2019, 10:58 AM IST
தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பிலும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளதால் ஒரு ஓட்டு கூட பதிவாகாமல் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடியுள்ளன Read More
Apr 16, 2019, 10:04 AM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியில் ஒரு கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து மலையில் குடியேறப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் இன்று காலை பெட்டிப்படுக்கைகளுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். Read More
Apr 13, 2019, 08:19 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலும் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை உள்ளது. மேலும், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கூட திடீர் திடீரென மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த நிலையில், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் மக்கள், ‘‘தேர்தலுக்கு மட்டும் வருகிறீர்களே, இத்தனை நாளா எங்க பிரச்னையை கேட்க யாராவது வந்தீர்களா?’’ என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். Read More