Jul 3, 2020, 15:00 PM IST
தமிழக பாஜக துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 பேரை நியமித்து கட்சித் தலைவர் எல்.முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், கே.டி.ராகவன் உள்பட 4 பேரை பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். Read More
Jul 3, 2020, 14:48 PM IST
இந்தியாவில் ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இது வரை நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 25,544 ஆக உயர்ந்துள்ளது.சீன வைரஸ் நோய் உலகம் முழுவதும் பாதித்திருக்கிறது. Read More
Jul 3, 2020, 11:32 AM IST
லடாக்கின் நிமு பகுதிக்குப் பிரதமர் மோடி இன்று அதிகாலையில் திடீர் விசிட் செய்துள்ளார். நிமு சென்று, எல்லையில் உள்ள ராணுவ அதிகாரிகளுடன் மோடி விவாதித்தார். காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே ஒரு மாதத்திற்கு முன்பு சீனா, திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. Read More
Jul 3, 2020, 10:23 AM IST
தமிழ், தெலுங்கில் நடித்த பிரபல நட்சத்திர ஜோடி டாக்டர் ராஜசேகர், ஜீவிதா. இவர்களின் மகள் ஷிவாமிகா. இவர் தொரசானி என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். படம் பெரிய அளவில் அவருக்குக் கைகொடுக்கவில்லை. தற்போது புதிய படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்திருக்கிறது. Read More
Jul 3, 2020, 10:19 AM IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப் பட்டார். இது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுபற்றி நடிகை வரலட்சுமி சரத்குமார் டிவிட்டர் பக்கத்தில் ஆவேசமாகக் கருத்து வெளியிட்டிருக்கிறார். Read More
Jul 3, 2020, 10:15 AM IST
பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ்கான் மாரடைப்பு காரணமாக நேற்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. மூன்றுமுறை தேசிய விருது வென்றிருக்கிறார். மறக்கமுடியாத பல பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் சரோஜ் கான். Read More
Jul 3, 2020, 10:09 AM IST
உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது அவர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் டி.எஸ்.பி. உள்பட 8 போலீசார் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 3, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் இது வரை கொரோனா வைரஸ் நோய்க்கு 1321 பேர் பலியாகி விட்டனர். தற்போது மருத்துவமனைகளில் 41,047 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. Read More
Jul 3, 2020, 09:59 AM IST
கோயில், சர்ச், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More
Jul 2, 2020, 19:02 PM IST
ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வித்தியாசமான படங்களைத் தந்தவர் வெற்றி மாறன். இவர் தனது படங்களுக்கு விருது கிடைத்தாலும் பாராட்டு கிடைத்தாலும் அது பற்றி பெரிதாகப் பதில் அளிக்காமல் தனது அடுத்த பணிக்குச் சென்றுவிடுவார். இவர் கடைசியாகக் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி தனது பதிவைச் செய்திருந்தார். Read More