Apr 18, 2019, 10:58 AM IST
தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பிலும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளதால் ஒரு ஓட்டு கூட பதிவாகாமல் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடியுள்ளன Read More
Apr 18, 2019, 08:57 AM IST
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும், பிரபலங்களும் காலை முதலே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். Read More
Apr 16, 2019, 20:24 PM IST
வேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய தேர்தல் வரலாற்றில் பட்டுவாடா புகாரின் பேரில் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும். Read More
Apr 16, 2019, 15:33 PM IST
வாக்குப்பதிவு நடைபெற்ற பின்னரும் மின்னணு எந்திரத்தில் முறைகேடுகள் செய்ய சதி நடப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். Read More
Apr 16, 2019, 13:04 PM IST
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. தமது சொந்த மாவட்டமான சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெருத்தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். Read More
Apr 16, 2019, 12:33 PM IST
தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு தேனி தொகுதியில் வாக்காளர்களுக்கு 'கவனிப்பு' எக்கச்சக்கமாக ஆகிவிட ஏக சந்தோஷத்தில் உள்ளனர் தொகுதி மக்கள். முதல் கட்டமாக தலைக்கு ரூ 1000 என ஜரூராக பட்டுவாடா நடந்து முடிந்த நிலையில் அடுத்த ரவுண்டில் டபுள் மடங்காக ரூ 2000 கிடைக்கப் போகிறது என்ற தகவலால் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் தொகுதிவாசிகள் Read More
Apr 16, 2019, 09:39 AM IST
வேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற உச்சகட்ட குழப்பத்தில் அத்தொகுதி அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் உள்ளனர். Read More
Apr 15, 2019, 14:50 PM IST
ஓட்டுச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் வாக்குச்சாவடியை சுற்றியுள்ள 100 மீட்டர் தொலைவுக்குள் செல்போன் பயன்படுத்தவும் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது Read More
Apr 15, 2019, 11:10 AM IST
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்தலில் இறுதிக்கட்டத்தில் விறுவிறு பிரச்சாரத்தை விட, ஓட்டுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற பேச்சே பிரதானமாக எழுந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. Read More
Apr 14, 2019, 19:57 PM IST
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஒரு வழியாக பிரச்சாரத்திற்கு தயாராகி விட்டார். நாளை ஒரு நாள் மட்டும் சென்னையில் 3 இடங்களில் பிரச்சாரத்தில் பங்கேற்று அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More