மே.வங்க வன்முறை.. பிரச்சாரம் ஒரு நாள் முன்பாக நிறைவு...! தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா!

கொல்கத்தாவில் பாஜக பேரணியில் ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தின் காரணமாக மேற்கு வங்கத்தில், பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாக முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதிலும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பாரபட்சமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் நடந்து கொண்டுள்ளதாக மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார் Read More


தன் கட்சி வேட்பாளர் பெயரையே தவறாக உச்சரித்த விஜயகாந்த் ...! சென்னை பிரச்சாரத்தில் ருசிகர காட்சிகள்

உடல் நலம் தேறி ஓய்வு எடுத்து வந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்னையில் இன்று பிரச்சாரம் செய்தார். திக்கித் திக்கி பேசத் திணறிய விஜயகாந்த், தன் கட்சியின் வேட்பாளர் பெயரையே உச்சரிக்க முடியாமல், அழகாபுரம் மோகன்ராஜ் என்பதற்குப் பதில் அழகாபுரம் ஆறுமுகம் அண்ணன் என்று உச்சரித்தார். முதலில் ஒரு சில இடங்களில் சில வினாடிகள் மைக் பிடித்து பேசிய விஜயகாந்த், பின்னர் வேனில் அமர்ந்தபடி முக்கிய சாலைகளில் கையசைத்தபடியே வாக்கு சேகரித்தார் Read More


தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது ; ஊரெங்கும் 'ஓட்டுக்கு துட்டு' எவ்வளவு என்பதே பேச்சு

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்தலில் இறுதிக்கட்டத்தில் விறுவிறு பிரச்சாரத்தை விட, ஓட்டுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற பேச்சே பிரதானமாக எழுந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. Read More


கொள்கையாவது ... கத்தரிக்காயாவது....தனிநபர் விமர்சனத்தில் தூள் கிளப்பும் எடப்பாடி, மு.க.ஸ்டாலின்

கொள்கை, கோட்பாடுகளைக் கூறி பிரச்சாரம் செய்த காலம் போய் தலைவர்களின் தனிநபர் விமர்சனங்களால் அதிர்ந்து போய்க் கிடக்கிறது தமிழக அரசியல் தேர்தல் களம்.அதிலும் சமீப நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு என்பது போல் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருவது காண்போருக்கும், கேட்போருக்கும் பொழுது போக்காகி விட்டது. Read More


மோடியை தூக்கிப் பிடிக்காதீங்க....'அம்மா புராணம்' பாடினாத்தான் ஓட்டு ... எடப்பாடிக்கு 'உளவுத்துறை' அட்வைஸ்

அதிமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் பேச்சுக்கு பேச்சு மோடி புராணம் பாடுவது கட்சியின் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் எரிச்சலைக் கொடுக்கிறது. அம்மா புராணம் பாடினால் தான் ஓட்டுக் கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடிக்கு உளவுத் துறை அட்வைஸ் செய்துள்ளதாம். Read More


பிரதமர் மோடி ஏப்.12 , 13-தேதிகளில் தமிழகத்தில் பிரச்சாரம் - ஓபிஎஸ் மகனுக்காக தேனிக்கும் வருகிறார்

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் ஏப்ரல் 12 மற்றும் 13-ந் தேதிகளில் தமிழகம் வருகிறார். துணை முதல்வர் ஓ .பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More


பிரச்சாரக் கூட்டத்திற்குள் புகுந்த ஆம்புலன்ஸ் - வழி ஏற்படுத்திக் கொடுத்த முதல்வர் எடப்பாடி

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்தில் புகுந்து, மேற்கொண்டு செல்ல முடியாமல் திணற, பேச்சை நிறுத்தி விட்டு ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தித் தர உதவி செய்தார். Read More


ஆரம்பித்த இடத்திற்கே மீண்டு வந்த நாஞ்சில் சம்பத்... திமுகவுக்காக 26-ல் புறப்படுகிறது பிரச்சார பீரங்கி

ஆரம்ப காலத்தில் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய நாஞ்சில் சம்பத் மதிமுக, அதிமுக, அமமுக என ரவுண்டு அடித்து விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் குரல் கொடுக்க 26-ந் தேதி முதல் புயல் வேகப் பயணத்திற்கு தயாராகி விட்டார். Read More


27-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரேமலதா தீவிர பிரச்சாரம் - தேமுதிக அறிவிப்பு

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 27-ந்தேதி முதல் ஏப்ரல் 16-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


`கடுமையான நடவடிக்கை எடுங்க சார்' - ஓ.பி.எஸ்ஸுக்கு ஷாக் கொடுத்த பள்ளி மாணவிகள்

ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத்குமார் தேனி நாடாளுமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் Read More