துணைமுதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத்குமார் தேனி நாடாளுமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவித்து இரண்டு நாட்கள் ஆகியும் சென்னையில் முகாமிட்டிருந்த அவர் இன்று தனது தந்தையுடன் தேனி வந்தார். அதன்படி இன்று முதல் பிரச்சாரத்தை துவங்கினார். பிரச்சாரத்துக்கு முன்னதாக ஒவ்வொரு கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன்படி தேனி பிரச்சாரத்தை முடிந்த்துக்கொண்டு இன்று அலங்காநல்லூர் பாலமேட்டில் மஞ்ச மலை அய்யனார் கோயிலில் மகனுடன் சாமி கும்பிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய ஓ.பி.எஸ், சாலையில் நடந்து மக்களிடம் வாக்கு கேட்டு வந்தபோது, அங்கு பேருந்துக்கு நின்று கொண்டிருந்த மாணவிகளிடம் நல்லபடியாக பரீட்சை எழுதுங்கள் என்று வாழ்த்தி பேசியிருக்கிறார். மாணவிகளும் 'நாங்களும் அம்மா கட்சிதான், பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த அயோக்கியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்க சார்' என்று கூறியுள்ளனர்.
இந்த கேள்வியை எதிர்பார்க்காவிட்டாலும், 'பெண்கள் இதுபோல் தைரியமாக பேச வேண்டும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அவர்களுக்கு பதில் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.