குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரானா தொற்று காரணமாகக் குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ஆம் தேதி நீக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.எனினும் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் குறைந்துவிட்டது.
இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு குற்றாலம் மெயின் அருவியில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர் மழை காரணமாகக் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி மெயினருவியில் மக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் எட்டரை மாதங்களுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை அருவிகளில் நீராட பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது
கொரோனா தொடர் பரவல் காரணமாகக் குற்றால அருவிகளில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொதுமக்கள் நீராடத் தடை விதிக்கப்பட்டது. கொரானா தொற்று குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி இதுவரை வழங்கப்படாமல் இருந்து வந்தது.
சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஊரடங்கைத் தளர்த்தி அருவிகளில் மக்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும் எனச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் தென்காசி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்காசி வட்டாரத்தில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நாடு முழுவதும் கொரானா தொற்று பரவலையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகக் கடந்த 8 மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு கடைகள் வணிக வளாகங்கள், கோவில்கள், திறக்கப்பட்டு மக்கள் வழக்கம் போல் சென்று வருகின்றனர்.
குற்றாலம் அருகே கேரள வாலிபரிடம் 45 லட்சம் ரூபாய் பணத்தை அபகரித்துச் சென்றதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 45 லட்ச ரூபாய் பணமும் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டுகிறது. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்குத் தடை நீடித்து வருவதால் அருவிகள் அனைத்தும் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.