சபரிமலை சீசனுக்காவது அருவியில் குளிக்க விடுங்க.. குற்றாலம் வியாபாரிகள் கோரிக்கை

சபரிமலை சீசன் நெருங்குவதையொட்டி குற்றாலத்தில் ஊரடங்கை முழுமையாகத் தளர்த்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

by Balaji, Nov 7, 2020, 15:29 PM IST

நாடு முழுவதும் கொரானா தொற்று பரவலையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகக் கடந்த 8 மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு கடைகள் வணிக வளாகங்கள், கோவில்கள், திறக்கப்பட்டு மக்கள் வழக்கம் போல் சென்று வருகின்றனர்.
ஆயினும் சுற்றுலாத் தலங்களில் ஊரடங்கு இன்னும் முழுமையாகத் தளர்த்தப் பட வில்லை.

குறிப்பாகத் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு தொடர்வதால் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேசமயம் பிற சுற்றுலாத் தலங்களான ஊட்டி கொடைக்கானல் ஹொகேனக்கல் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குற்றாலத்தில் மட்டும் இன்னும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது லால் அவர்களது வருகையை மட்டுமே நம்பியுள்ள வர்த்தகர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் குற்றாலம் வழியாக அதிகளவில் வந்து செல்வர். எனவே இந்த காலகட்டத்திலாவது குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் தங்களது வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். அதைக் கருத்தில் கொண்டு குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லவும் அருவிகளில்
நீராடவும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என இப்பகுதி வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You'r reading சபரிமலை சீசனுக்காவது அருவியில் குளிக்க விடுங்க.. குற்றாலம் வியாபாரிகள் கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை