தேனி மாவட்டம் உத்தம பாளையத்தைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொது நல வழக்கினைத் தொடர்ந்திருந்தார். அதில், 100 சதவிகித வாக்குப்பதிவிற்காகத் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தும் ஓட்டு போடும் வசதியை ஏற்படுத்துவது குறித்து மத்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
நாளை மறுநாள் சென்னை வரும் இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கத் தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழு இம்மாதம் 21ஆம் தேதி தமிழகம் வர உள்ளது.சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக் குழு வரும் 21-ந் தேதி தமிழகம் வரவுள்ளது.
தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுப் போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும் ஓட்டுப் போட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
உலகம் கேரளம் புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான பணிகளை தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
“தபால் வாக்களிக்கும் முறை என்ற பாசக் கயிற்றை அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான முயற்சிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை
பீகார் சட்டசபைக்கான முதல் கட்டத் தேர்தலில் 71 தொகுதிகளில் 52 ஆயிரம் பேர் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.இதில் தில்லுமுல்லு நடக்குமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சப்படுகின்றன.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகனும் மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே ஆகியோருக்கு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.