மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டும் மத்தியப் படைகள்? தேர்தல் ஆணையம் விளக்கம்!

Advertisement

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் மத்தியப் படைகள் அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேற்கு வங்கம், தமிழகம், புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் முன்பே மத்திய பாதுகாப்பு படைகள் குறிப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில், மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டும் மத்தியப் படைகள் அனுப்பப்பட்டு வருவதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. எனவே இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பகுதிகளை குறிப்பாக பதற்றமான பகுதிகளை நன்கு அறிவதற்கும், கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும் மத்திய ஆயுத படைகள் முன்பே அனுப்பி வைப்பது வழக்கமான ஒன்று. அப்போதுதான், அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பில் இருந்து நம்பகமான தகவல்களை திரட்டி நிலவரத்தை முன்கூட்டியே ஆய்வு செய்ய முடியும். இந்த நடைமுறை கடந்த 1980-ம் ஆண்டுகளில் இருந்து பின்பற்றப்படுகிறது. 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அதேப்போல்தான். சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது கூட சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களான அசாம், கேரளா, தமிழகம், மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரிக்கு மத்திய ஆயுதப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கு மத்திய ஆயுதப்படைகளை அனுப்பிவைக்கும் உத்தரவு அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், டிஜிபிக்கள், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடந்த பிப்ரவரி 16-ம் தேதியே அனுப்பப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி

READ MORE ABOUT :

/body>