சொந்த ஊரில் ராமர் கோயில் கட்ட முன்னாள் முதல்வர் திட்டம்!

by Sasitharan, Feb 22, 2021, 19:47 PM IST

அயோத்தி ராம் மந்திருக்கு நிதி அளிக்காமல் சொந்த ஊரில் ராமர் கோயிலை முன்னாள் முதல்வர் கட்டி வருகிறார். உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போத வரை ரூ.1500 கோடிக்கும் மேலான நன்கொடை வசூலாகியுள்ளது. இதற்கிடையே, அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு நன்கொடை வசூலிக்கும் விவகாரத்தில் கர்நாடக மாநில அரசியலில் சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியிருக்கிறது. ஆளும் பாஜக அரசு ராமர் கோயில் கட்ட வசூலில் முறைகேடு செய்கிறது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எடியூரப்பா அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

கர்நாடக முன்னாள் முதல்வர்களான குமாராசாமி மற்றும் சித்தராமையா ஆகியோர் அயோத்தி ராமர் கோயில் நன்கொடை வசூலிப்பதற்கு எதிராக கடுமையாக பேசியுள்ளனர். ஆளும் பாஜகவின் பல ஆர்வலர்கள் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் போன்ற பல அமைப்புகளுடன், வீடு வீடாகச் சென்று ஸ்ரீ ராம் மந்திரி நிதி சமர்பனா அபியான் பிரச்சாரத்தின் கீழ் நாடு முழுவதும் நிதி சேகரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறுகையில், நான் கோயில்கள் கட்டுவதற்கு எதிரானவன் அல்ல. தனியார் நிறுவனங்களின் நன்கொடைக்கு நான் எதிரானவன். அவர்களுக்கு அனுமதி வழங்கியவர் யார்? அவர்கள் மக்களை அச்சுறுத்துகிறார்கள். இதனால் நான் கூட பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு பெண் உட்பட மூன்று பேர் என் வீட்டிற்கு வந்தார்கள், நீங்கள் ஏன் பணம் கொடுக்கவில்லை என்று கேட்டு என்னை மிரட்டினார்கள் என்றார். 1989-ல் கூட பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ராமர் கோயில் கட்ட பணம் சேகரித்திருந்தார். அந்த பணம் என்ன ஆனது. அந்த பணத்திற்கான கணக்கு கொடுப்பார்கள்?.

ராம் மந்திர் கட்டுமானத்திற்காக நன்கொடைகளை சேகரிப்பவர்கள் பணம் செலுத்தியவர்கள் மற்றும் பணம் செலுத்தாதவர்களின் வீடுகளை தனித்தனியாக குறித்து கொண்டு வருகின்றனர். ஹிட்லரின் ஆட்சியின் போது லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தபோது ஜெர்மனியில் நாஜிக்கள் செய்ததைப் போன்றது இது உள்ளது. ஜெர்மனியில் நாஜி கட்சி நிறுவப்பட்ட அதே நேரத்தில் ஆர்எஸ்எஸ் பிறந்தது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். நாஜிக்கள் ஏற்றுக்கொண்ட ஒத்த கொள்கைகளை ஆர்எஸ்எஸ் செயல்படுத்த முயற்சித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய கவலைகள் உள்ளன என்றார்.

இது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில், அயோத்தியில் உள்ள கோயிலுக்கு நிதி திரட்டுவதற்காக பாஜக பொதுமக்களின் உணர்ச்சிகளை சுரண்டுகிறது. ராம் மந்திர் நிறுவப்படவுள்ள, நிலத்தின் சர்ச்சைக்குரிய தன்மை காரணமாக இதற்கு பங்களிக்க மாட்டேன். அதற்கு பதிலாக வேறு இடத்தில் ஒரு கோயில் கட்டப்பட்டால் தானம் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருந்தாலும், இந்த விவகாரம் தொடர்பாக இன்னும் நீடித்த சர்ச்சைகள் நிலவுகின்றன. எனினும், ராம் மந்திர் நிறுவப்படுவதற்காக இதற்கு முன் சேகரிக்கப்பட்ட நிதிகள் எல்லாம் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார்.


கடந்த காலத்திலும் இதே நோக்கத்திற்காக பொதுமக்களிடமிருந்து பணம் சேகரிக்கப்பட்டது. ஆனால் அத்தகைய நிதி அல்லது செங்கற்கள் சேகரிக்கப்பட்ட விவரங்கள் எதுவும் யாருக்கும் தெரியவில்லை. அயோத்தியில் உள்ள ராம் கோயிலுக்கு பொதுமக்களிடமிருந்து பணம் சேகரிப்பவர்கள் அதை தவறாக பயன்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளதால், இதற்கு பொறுப்பு யார் என்று கூறப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிதி கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ள சித்தராமையா மைசூரு மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் ராம் கோயில் கட்ட திட்டமிட்டுள்ளார். இதுபோன்ற கோயில்கள் எல்லா கிராமங்களிலும் கட்டப்பட்டுள்ளன என்றும் இதேபோன்ற ஒன்றை தனது சொந்த கிராமத்தில் கட்டி வருவதாகவும் சித்தராமையா கூறியுள்ளார்.

You'r reading சொந்த ஊரில் ராமர் கோயில் கட்ட முன்னாள் முதல்வர் திட்டம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை