குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தைச் சேர்ந்த பழனி, அஞ்சலை, பெரியசாமி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான சுமார் 600 ஆடுகளை ஆற்றங்கரையின் ஓரமாக ஒரு கொட்டகையில் கட்டி வைத்திருந்தனர்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக் ஏர்பேடு மண்டலம் கந்தாடா கிராமத்தில் உள்ள ஒரு மாங்காய் தோப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தங்கி காவல் காத்து வந்தனர்.
மக்களின் பாதிப்புகளை நிவர்த்தி செய்யாமல் பேட்டி அளிப்பது மட்டுமே “நிவர் சாதனை” என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 5 முக்கிய நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரிதான் மிகப் பெரியதாகும். 9 கிலோமீட்டர் நீளமும் 24 அடி உயரமும் உள்ள இந்த ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆறுகளில் தண்ணீர் சென்று கடலில் கலக்கும். இந்த ஏரி 500 ஆண்டுகள் பழமையானது.
சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.25) பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டது. இதையடுத்து, அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் உள்ள மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
தென்காசி வட்டாரத்தில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஒன்றரை கிலோ தங்கத்தை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்று கூறிய நகைக்கடை ஊழியரிடம் போலீசார் சந்தேகத்தின் பெயரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், காவிரி கரையோரப் பகுதிகளில வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.