கள்ளக்குறிச்சி : வெள்ளத்தில் சிக்கி 200 ஆடுகள் பலி

by Balaji, Jan 7, 2021, 17:59 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 200 ஆடுகள் பலியாகின.சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தைச் சேர்ந்த பழனி, அஞ்சலை, பெரியசாமி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான சுமார் 600 ஆடுகளை ஆற்றங்கரையின் ஓரமாக ஒரு கொட்டகையில் கட்டி வைத்திருந்தனர். கடந்த 2 நாட்களாக கல்வராயன்மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் ஆற்றங்கரை ஓரமாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது இன்று காலை ஆற்றங்கரைக்கு வந்து பார்த்த விவசாயிகள் குறைந்த ஆடுகளே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் ஆடுகளைத் தேடிச் சென்றபோது சற்று தூரத்தில் ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனைக் கண்ட விவசாயிகள் கதறி அழுதனர். தகவலறிந்து அந்த பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். விவசாயிகள் மீதம் இருந்த ஆடுகளை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றனர்.

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்