தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து கொரானோ ஊரடங்கு விதி முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது ஒரு சில தளர்வுகள் கூடிய ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. பூங்கா மற்றும் தியேட்டர்கள் திறக்கப்பபடுவதாகத் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா 8 மாதத்திற்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.
பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் அரசு கூறியுள்ள கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு கடைபிடிக்கத் தவறினால் ரூ 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.அதுபோக உயிரியல் பூங்காவில் நுழைவதற்கான டிக்கெட்டுகளை www. tickets.aazp.in என்ற இணைய தள முகவரியிலும்,மொபைல் செயலியிலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பூங்கா நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.