நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். இதுவரை கமர்ஷியல் ஹீரோயினாக நடித்து வந்த நயன்தாரா இப்படத்தில் முதன் முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கிறார்.