எல்.ஆர். ஈஸ்வரியுடன் அருள் வந்து ஆட்டம்போட்ட நடிகர்..

by Chandru, Oct 31, 2020, 18:02 PM IST

நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். இதுவரை கமர்ஷியல் ஹீரோயினாக நடித்து வந்த நயன்தாரா இப்படத்தில் முதன் முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கிறார். இதற்காக 48 நாட்கள் விரதம் சுத்தபத்தமாக இருந்து நடித்துள்ளார். இது முழுக்க காமெடி படம் என்றாலும் இந்த கால அரசியலை நெய்ய புடைக்கும் படமாக உருவாகி இருக்கிறது என்பது ட்ரெய்லரில் வெட்ட வெளிச்சமாகிறது. அரசியல் கட்சிகள், சாமியார். மத பிரச்சனை என எல்லாவற்றையும் ஒருபிடி பிடித்திருக்கிறார்கள்.

நான் நோன்பு கஞ்சியைக் குடிப்பேன் ஒருபோதும் ஆடி மாத கூழ் குடிக்க மாட்டேன் கடவுள் இல்லன்னு சொல்றவன நம்பிடலாம் ஆன ஒரு கடவுள உசத்தி இன்னொரு கடவுளே திட்றவன் ரொம்ப டேஞ்சர் இந்த ஜனங்களுக்கு இந்த சாமியாருங்க தான் கடவுள். இவ்வளவுதான் இவங்க பக்தி.தமிழ் நாட்ல மட்டும் மதத்தின் பேர சொல்லி இடத்தை பிடிக்க முடியல அடுத்த ஐந்து பிடிச்சி காட்றேன் பார்க்கலாம் இவங்க என்ன பண்றான்னு பாக்கலாம் என அதிரடியான வசனங்கள் ட்ரெய்லரிலேயே பரபரத்தது.இப்படி அம்மன் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா அதிரடி அரசியல் பேசி இருக்கிறார். அவர் பேசி இருக்கும் அரசியல் படத்தை எங்கு கொண்டுபோய் நிறுத்தப் போகிறது என்பது விரைவில் தெரியும்.வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படம் வருகிற தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

மூக்குத்தி அம்மன் படப் படப்பிடிப்பு தள வீடியோ ஒன்றை ஆர்,ஜே. பாலாஜி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். பல பக்தி பாடல்களும், திரைப்படப் பாடல்களும் பாடிய பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது அவரை பாலாஜி வரவேற்றனர். அப்போது மேளதாளம் மயிலாட்டம் எல்லாம் தூள் பறக்கிறது. எல்.ஆர்.ஈஸ்வரி யை வரவேற்ற பாலாஜி அருள் வந்ததுபோல் திடீரென்று ஆட்டம் ஆட அவருடன் எல் ஆர் ஈஸ்வரியும் ஆடினார். இப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி நடித்தும் இருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை