திகில் கிளப்பிய கால் டாக்ஸி டிரைவர்கள் மர்ம கொலை.. உண்மை சம்பவங்களுடன் ஒரு திரைப்படம்..

Advertisement

வீட்டில் நிற்க வைத்திருக்கும் சைக்கிள், கார் வரை திருடபடும் சம்பவங்கள் ஊரெங்கும் நடக்கிறது. ஒரு பைக் திருடப்பட்ட சில மணி நேர்த்துக்குள் கண்டுபிடிக்கப் பாடாவிட்டால் பிறகு அந்த பைக் கண்டுபிடிக்கவே முடியாது. திருட்டு கும்பல் அதனைத் தனி இடத்தில் வைத்து அக்குவேறு ஆணி வேறாகக் கழற்றி உருத் தெரியாமல் ஆக்கிவிட்டு அதை வேறுவிதமாக விற்கிறார்கள். இதுபற்றிய படமே வந்திருக்கிறது. ஆனால் ஓடுகிறபோதே காரை திருடும் கும்பல் இருக்கிறது அதே போல் கால்டாக்ஸி டிரைவர்கள் கொல்லப்படும் சம்பவமும் நடக்கிறது. அதைப் பற்றிய பரபரப்பான கதையாக உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது கால் டாக்ஸி.

இப்படத்தை கே.டி.கம் பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரிக்கிறார். தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் இதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். எம்.ஏ. ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர். ஸ்டண்ட் காட்சிகளை எஸ்.ஆர்.ஹரி முருகனும், எடிட்டிங்கை டேவிட் அஜய்யும் கவனித்துள்ளார்கள்.

இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக "மெர்லின்", "மரகதகாடு", “டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடித்திருக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், கான மஞ்சரி சம்பத்குமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் டீஸரை விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார்.

மேலும் சமூக வலைத் தளங்களில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும் வெளியிட்டிருக்கிறார்கள்.கொரோனா ஊரடங்கால் திரைப்படங்கள் வெளியிட தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. படங்கள் ரிலீஸ் செய்வதற்கு முன் அப்படங்களுக்கான புரமோஷனை செய்வதற்கு பெரிய அளவில் விழா நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளது. இதனால் படங்களின் புரமோஷனை பிரபல நடிகர்கள் விழாக்கள் ஏதும் இல்லா விட்டாலும் தனிப்பட்ட முறையில் செய்து தர முன்வருகின்றனர். அந்த வகையில் கால் டாக்ஸி பட புரமோஷனை விஜய் சேதுபதி. ஸ்ரீகாந்த், சமுத்திரக் கனி செய்தளித்துள்ளனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>